அந்த பச்சிளம் குழந்தை
சுஜித் உயிர்
அந்த குழந்தை சுஜித் அவனது தாயையும் நம்மையும் விட்டு பிரிந்து சென்று விட்டான். அவன் பூமி தாயின் கருவறையில் 3 நாட்களாக இருந்து வந்தான்.
தனது தாயும் மற்றவர்களும் தன்னை எப்புடியவது காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த சிறு குழந்தை சுஜித் 3 நாட்கள் அந்த இருள் சூழ்ந்த இடத்தில் எவ்வளவு படத்தோட இருந்திருபான்.
குழந்தை என்றாலே இருள் கண்டு பயப்படும் ஆனால் சிறுவன் சுஜித் தனது தாயின் கருவறையில் பார்த்த இருளை விட இந்த மூன்று நாட்கள் பூமி தாயின் கருவில் இருந்த இருளை கண்டு அவன் மிகவும் பயத்தோடு இருந்திருபான்.
3 நாட்கள் மீட்பு பணி நடந்தும் அந்த சிறுவனின் உயிர் காப்பாற்ற பட வில்லை. இந்த நாட்டில் தேவையானதை விட தேவை இல்லாதது தான் அதிகம் உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்க்க நம்மிடம் தொழில்நுட்பம் உள்ளது ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற எதுவும் இல்லை.
குழந்தை சுஜித் நம்மிடம் இருந்து கண்ணீருடன் விடை பெற்றுவிட்டான். எல்லோரையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டான். அவன் உயிர் பிரியும் போது சுற்றி இத்தனை பேர் இருந்தும் என்னை காப்பாற்ற தவறி விட்டிர்களே என்று நினைத்திருப்பான்.
இனியாவது எந்த குழந்தையும் ஆழ்துளை கிணற்றுள் விழாத வாறு அதனை நாம் மூடி வைப்போம்.
சுஜித் உலகை விட்டு பிரிந்து செல்கிறோம் என்று வருந்தாதே. நீ மீண்டும் உன் தாயின் கருவில் பிறந்து வா உனக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
No comments:
Post a Comment