Wednesday, October 30, 2019

கொல்லிமலையில் காக்கப்படும் இரகசியம்……

Kollimalai hills : 21ம் நுாற்றாண்டின் நவீன உலகத்திலும் பல இரகசியங்களை உள்ளடக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தும் முக்கிய பகுதியாக கொல்லிமலை உள்ளது.


 நுாற்றாண்டின் நவீன உலகத்திலும் பல இரகசியங்களை உள்ளடக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தும் முக்கிய பகுதியாக கொல்லிமலை உள்ளது.
இது ஆன்மீக பூமி, மலைச் சுற்றுலாவுக்கு ஏற்ற பகுதி, மூலிகைச் செடிகள் நிறைந்த மலை என்று பல பெயர் இருந்தாலும், பல புரியாத புதிர் நிறைந்த இடமாகவும் அது அறியப்படுகிறது. புராண காலம் முதல் இன்று வரையில் இங்கு சித்தர்கள் பலர் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது.


இத்தோடு நம்மை மேலும் சிந்திக்க வைக்கும் மற்றொரு செய்தியும் இங்கு உள்ளது அதாவது இங்கு இருக்கும் சித்தர்களுக்கு கூடு விட்டு கூடு பாயும் கலை தெரியுமாம். இந்த கலை தெரிந்த சித்தர்கள் இன்றும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
மேலும் இங்கு இருக்கும் ஓர் அபூர்வ மூலிகையை உட்கொண்டால் மனிதர்கள் மாயமாக மறைந்துவிடுவார்களாம். அதை உண்டுதானாம் சித்தர்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றனராம்.
மேலும் இங்கு சுடர்விட்டு எரியக்கூடிய ஜோதிப் புல் என்ற வகை செடி ஒன்று உண்டு. அதை பயன்படுத்தி தான் சித்தர்கள், குள்ளர்கள் தங்களது குகைகளில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகின்றது. சித்தர்கள் வாழ்ந்த, வாழும் குகைகளை இன்றும் இங்கு பார்க்கலாம். ஆனால் அதற்குள் போகவேண்டாம் என எச்சரிக்கின்றனர் இந்த பகுதி மக்கள்.

No comments:

For SBI account holders, 3 things that change from today

3 things will change for SBI customers from today, 1st January 2020 So, if you are an SBI customer, you need to be aware of these changes...