Saturday, October 26, 2019

கீழடி ஸ்பெஷல்: 15 லட்சம் ஆண்டுகள் பழமையான அத்திரம்பாக்கம்

அத்திரம்பாக்கம் சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கொற்றலையாறு தற்போது ஓடுகின்றது. இங்கு கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் பழமையான வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய கல் கருவி கலாசாரத் தளமாக இவ்விடம் உள்ளது.

தொல்பழங்காலம்
தொல் பழங்காலம் என்பது வரலாற்றுக்கு முந்தையக் காலமாகும். இக்காலம் கற்காலம் என்றும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலம் மனித இனம் பூமியில் தோன்றிய காலத்தில் இருந்து தொடங்குவதாகக் கருதலாம். எழுத்துச் சான்றுகள் இல்லாத காலத்தில் மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு மனித குல வரலாற்றை அறிவது தொல் பழங்கால வரலாறு ஆகும். தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மனித இனம் கற்கால மனித இனம் என்று என்று அழைக்கப்படுகிறது. தொல் பழங்காலத்தில் கற்களைக் கொண்டு விலங்குகளை வேட்டையாடி மனிதன் உணவைத் தேடினான். மனித குல வாழ்விற்கு கற்களே பெரிதும் பயன்படுத்தப்பட்டதாலும், அவைகளை வேட்டையாடுவதற்கேற்ற கருவிகளாக மாற்ற மனிதன் முதலில் சிந்திக்கத் தொடங்கியதாலும் அக்காலம் கற்காலம் என அழைக்கப்படுகிறது.



தமிழகத்தில் அத்திரம்பாக்கம் என்ற இடம் தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

தமிழகத்தில் அத்திரப்பாக்கம், குடியம், பரிகுளம், பல்லாவரம் உள்ளிட்ட பல தொல் பழங்கால வாழ்விடங்கள் அமைந்துள்ளன. தொல் பழங்கால மனிதன் வாழ்ந்து விட்டுச் சென்ற எச்சங்களைக் கொண்டு இவ்விடங்களை அகழாய்வு செய்வதன் மூலம் தமிழக தொல் பழங்கால வரலாற்றை அறிய இயலுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் பரிகுளம் என்னும் தொல் பழங்கால வாழ்விடத்தை அகழாய்வு செய்ததன் மூலம் சுமார் ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் தமிழகத்தில் தொல் பழங்காலம் தொடங்கியதாக தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இத்தகைய பல தொல் பழங்கால இடங்களை கண்டறிந்து அகழாய்வு செய்வதன் மூலம் இக்காலத்தை இன்னும் முன்னதாக கொண்டு செல்ல வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.


1863-1866 காலகட்டத்தில் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் கண்டறிந்தனர்.


அத்திரம்பாக்கத்தில் கே.டி.பானர்ஜி, சாந்தி பப்பு போன்ற அறிஞர்கள் அகழாய்வு செய்துள்ளனர். அகழாய்வு என்பது ஒரு இடத்தை முறையாகத் தோண்டி அங்கு கிடைக்கும் தொல்பொருட்களைப் பதிவு செய்து, சேகரித்து ஆராய்வதாகும். சாந்தி பப்பு அண்மையில் செய்த ஆய்வுகளின் வழியாக இந்த இடம் சுமார் 15 லட்சம் வருடங்களுக்கும் மேல் பழமையானது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 




இந்த இடத்தில் செய்த அகழாய்வுகளின் வழியாகக் கீழைப் பழங்கற்காலம் (Lower Palaeolithic period), இடைப் பழங்கற்காலம் (Middle Palaeolithic period), மேலைப் பழங்கற்காலம் (Upper Palaeolithic period) மற்றும் இடைக்கற்காலம் (Mesolithic period) (நுண்கற்கருவிக் காலம், Microlithic period) ஆகிய காலத்தைச் சேர்ந்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
ஆற்றுப்படுகையில் கிடைக்கும் குவார்சைட் (quartzite) எனப்படும் ஒரு வகை உருமாறிய கல் (metamorphic rock) வகைகளை, இவர்கள் கற்கருவிகள் செய்யப்பயன்படுத்தி உள்ளனர். இக்கற்கள் கிடைக்காத இடங்களில், சுண்ணாம்புக்கல், கிரானைட் போன்ற கற்களையும் பயன்படுத்தியுள்ளனர். 


இவர்கள் செய்த கருவி கைக்கோடரி என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு அச்சூலியன் கருவி என்ற பெயரும் உண்டு. இக்கருவி வெட்டுவதற்கும், குழி தோண்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இக் கருவிகளை அவர்கள் கூழாங்கற்களைப் பயன்படுத்தி மிக அழகாகச் செதில்களை உடைத்து எடுத்துச் செய்துள்ளனர். இவர்கள் கிளீவர் எனப்படும் வெட்டும் கருவியையும்; பிற்காலத்தில் சுரண்டிகள் மற்றும் பிற கருவிகளையும் பயன்படுத்தினர்.


அத்திரம்பாக்கம் என்ற இடம் ஒரு தொல்பழங்கால (Prehistoric) மக்களின் வாழ்விடமாகும். கற்கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடி, உணவு சேகரித்த மக்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்துள்ளனர். இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்தல், ஆடு-மாடு வளர்த்தல் போன்றவற்றை அறிந்திருக்கவில்லை. மேலும் இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களின் பயனையும் அறிந்திருக்கவில்லை. 


இம்மக்களின் சான்றுகள் இந்த இடத்தில் மண்ணில் புதையுண்டு காணப்படுகின்றன. இது உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறப்பு வாய்ந்த தொல்பழங்கால இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. அத்திரம்பாக்கம் சென்னைக்கு வடமேற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் கொற்றலையாறு தற்போது ஓடுகின்றது. இங்கு கற்கருவிகள் செய்வதற்கு ஏற்ற கற்கள் கிடைக்கின்றன. இந்த இடம் இராபர்ட் புரூஸ் பூட் மற்றும் வில்லியம் கிங் ஆகிய நிலப்பொதியியல் வல்லுனர்களால் 19-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

For SBI account holders, 3 things that change from today

3 things will change for SBI customers from today, 1st January 2020 So, if you are an SBI customer, you need to be aware of these changes...