சிறுவன் சுர்ஜித்தை காப்பாற்றுவதற்காக ஆழ்துளை கிணற்றுக்கு அருகே தோண்டப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் மீட்புப் பணி மெதுவாக நடக்கிறது
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க 2 நாட்களாக மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் ரிக் என்று சொல்லக் கூடிய அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்
ஆழ்துளை கிணற்றுக்கு அருகே புதிதாக தோண்டப்படும் துளை வழியாக குழந்தையை மீட்க திலிப்குமார், அம்ணிகண்டன், கண்ணதாசன், நகைமுகன், ராம்குமார், அபிமன்னன், தனுஷ் ஆகியோர் தயார் நிலையில் உள்ளிட்ட 7 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
7 தியணைப்பு வீரர்களில் ஒருவர் மட்டும் கீழே இறங்கி குழந்தையை மீட்க உள்ளார். சுவாச கருவிகள் மற்றும் பாதுகாப்புடன் தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறக்கி விடப்படுவார்கள்
சிறுவன் சுர்ஜித்தை மீட்பதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. புதிதாக துளையிடப்படும் இடத்தில் அதிகமாக பாறைகள் இருப்பதால் பணி மெதுவாக நடக்கிறது
No comments:
Post a Comment